இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரம சிங்கே பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும் பதவி விலக வேண்டும் என மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

இந்த கொந்தளிப்பான சூழலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள ரணில், இன்று முதல் அதிபரின் அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகின்றது. 

அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13 ஆம் தேதியிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டதாகவும், அக்கடிதம் இன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வரும் 20 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமாவிற்கு பிறகு புதிய அதிபர் தேர்தல் நடைபெறும் . அப்போது ரணில் அதிபராகவே நீடிப்பார் என்பது தெரியவரும்.