தைவான் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கவலை

தைவான் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
தைவான் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கவலை

தைவான் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சமீப காலமாக தைவானை ஒட்டிய பகுதிகளில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.  தன்னை ஒரு தனி நாடாக பறைசாற்றிக் கொள்ளும் தைவான் மீது, சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன்படி தைவான் எல்லை பகுதிகளில் சீன வீரர்கள், ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்களை நிலைநிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சீனா, தைவானுக்கு எதிரான ராணுவ நிலைபாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியதுடன், தைவானின் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீனா குறைத்து மதிப்பிடுவதாகவும் சாடியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com