இந்தியாவில் மது அருந்துபவர்களில் 7 சதவீதம் பெண்களே! - ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் மதுபானங்கள் அதிகம் விற்க்கப்படுவதால் இது குறித்து ஆய்வு ஒன்று டெல்லியில் நடத்தப்பட்டது.
இந்தியாவில் மது அருந்துபவர்களில் 7 சதவீதம் பெண்களே! - ஆய்வில் வெளியான தகவல்

இந்த ஆய்வில் இந்தியாவில் விற்க்கப்படும் மொத்த மதுபானங்கள் குறித்தும்,மதுக்களை எத்தனை பேர் அருந்தி வருகின்றனர் எனவும் யு.பி.எஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை செய்து முடிக்க திட்டமிட்டது.

இது குறித்து செய்யப்பட்ட ஆய்வில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா முழுவதும் உள்ள நபர்களில் மொத்தம் 16 கோடி பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிவித்தது.அதில் குறிப்பாக 7 சதவீதம் பெண்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் கொரோனா தொற்றின் பரவலுக்கு பின் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய மதுபான சந்தையில் யூனியன் ஸ்பிரிட்ஸ் என்ற பிராண்டின் கீழ் வரும் மதுபானங்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து  யுனைடெட் ப்ரூவெரிஸ் நிறுவனத்தின் பீர்கள் அதிகளவில் விற்பனையாகி முதல் இடத்தில் உள்ளதாகவும், கிங் பி‌ஷர் பீர் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு எனவும் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், அரியானா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில்  மதுப்பிரியர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.

கள் மற்றும் நாட்டு சாராய விற்பனையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா  முதல் இடத்தில் உள்ளன.காஷ்மீர், மேற்குவங்காளம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கள் மற்றும் நாட்டு சாராயங்களின் விற்பனை மிக குறைவாக காணப்படுவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com