ஜாமீன் கோரும் மெகுல் சோக்சி... டொமினிகா நீதிமன்றத்தில் மனு..

ஜாமீன் கோரி மெகுல் சோக்சி டொமினிகா நீதிமன்றத்தில் மனு
ஜாமீன் கோரும் மெகுல் சோக்சி... டொமினிகா நீதிமன்றத்தில் மனு..
டொமினிகா நீதிமன்றத்தில் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பொதுத்துறை வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு ஆண்டிகுவாவில் தஞ்சமடைந்திருப்பவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. கடந்த மாதம் டோமொனிகாவில் இருந்து கியூபாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றது அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு காடத்துவதா அல்லது ஆண்டிகுவாவுக்கு நாடு கடத்துவதா என்பது குறித்த விசாரணை டோமினிகா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மெகுல் கோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் டொமினிகா சிறையில் உள்ள மெகுல் சோக்சி ஜாமீன் கோரி டொமினிகா நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.
logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com