ஆப்கானை தொடர்ந்து கினியா நாட்டிலும் அதிபா் ஆட்சி கலைப்பு...

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

ஆப்கானை தொடர்ந்து கினியா நாட்டிலும் அதிபா் ஆட்சி கலைப்பு...

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை அதிபராக ஆல்பா காண்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வந்தது. இந்நிலையில், தலைநகா் கோனாக்ரியில் உள்ள அதிபா் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது.

இதனையடுத்து அரசுத் தொலைக்காட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ தளபதி மமாடி டம்போயா, அதிபா் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தாா். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என குறிப்பிட்ட அவர், அதிபரின் நிலை என்ன? என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.