13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை......

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை......

மக்கள் ஆணையை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்த ரணில் விக்கிரசிங்கேவுக்கு 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அதிகாரம் இல்லை.

கொழும்புவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விமல் வீரவன்ச பேசுகையில், அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அதனை முழுமையாக தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளை குடியரசு தலைவா்  ரணில் விக்கிரமசிங்கே முன்னெடுத்துள்ளார் என கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு கிடைத்த மக்கள் ஆணையை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்த ரணில் விக்கிரசிங்கேவுக்கு 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அதிகாரம் இல்லை என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தொிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com