இலங்கயில் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை!

இலங்கயில் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கயில் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையிலும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திக்குமுக்காடி வருகிறது.

இலங்கையில் உணவு தட்டுப்பாடு உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 40 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் நேரடியாக பாதிக்க கூடும் என்றும் அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  உத்தரவிட்டுள்ளார். 2 வாரத்தில் திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து சமர்பிக்கவும் அக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com