இலங்கை அதிபர் தேர்தலுக்கு வேட்மனு தாக்கல்

இலங்கை அதிபர் தேர்தலுக்கு வேட்மனு தாக்கல்

இலங்கை அதிபர் தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி, அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி பிடித்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அதிபருக்கான தேர்தல்

இதனிடையே புதிய அதிபரை தேர்ந்தெடுத்திடும் வகையில், அதிபர் தேர்தலானது நாளை நடைபெறவுள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கே, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநயாக்க  ஆகியோர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சஜித் பிரேமதாச அப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

அதிபர் வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டனர்

இந்தநிலையில் நாடாளுமன்றம் தொடங்கியதும், நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம் பெற்றிருந்தது.  இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார்.