அகதிகளை கைது செய்த காவல்துறை.....

அகதிகளை கைது செய்த காவல்துறை.....

கரீபியன் தீவு நாடான ஹைதியிலிருந்து அமெரிக்கா நோக்கி சுமார் 400க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படையினர் மடக்கியுள்ளனர்.  

ஹைதி நாட்டில் வன்முறை மற்றும் வறுமை அதிகரித்துள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சமடைய ஆபத்தான முறையில் கடற்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்தவகையில், ஹைதியிலிருந்து பஹாமாஸ் வழியாக 396 அகதிகளுடன் சென்ற படகை அமெரிக்க கடலோர காவல்படையினர் மடக்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com