பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா பரிசீலனை…காரணம் இது தான்!

பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா பரிசீலனை…காரணம் இது தான்!

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் பலிவாங்கி நாட்டின் பெரும்பகுதியை நாசமாக்கிய பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி கருத்து

இந்தியா விரைவில் அதன் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு உதவி செய்யக்கூடும் என்ற செய்திகளுக்கு மத்தியில், ஆகஸ்ட் 30 அன்று மழை வெள்ள பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த மோடி, “பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டு வருத்தமாக இருக்கிறதுஎன்று கூறினார்.

இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று நம்புகிறோம்,” என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்தியா உதவி செய்யுமா?

சமீபத்திய கணக்கின்படி 1,100 க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கிய வெள்ளத்தின் பின்விளைவுகளைச் சமாளிக்க பாகிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தற்போது யோசித்து வருகிறது. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினாலும், உயர் அதிகாரிகள் இது குறித்த சாத்தியமான நடவடிக்கை பற்றி விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கம் போன்ற கடந்தகால இயற்கை பேரிடர்களின் போது முந்தைய அரசாங்கங்கள் உதவி வழங்கிய போதிலும், 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்ற பிறகு, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் முதல் மனிதாபிமான உதவியாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

பத்து லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன

இந்தியாவிடமிருந்து சாத்தியமான உதவி குறித்து இஸ்லாமாபாத் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானின் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் சமீபத்தில் இந்தியாவில் இருந்து காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றார். இந்தியாவின் காஷ்மீர் பகுதி தொடர்பான சர்ச்சையில் நீண்டகாலமாக  இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் முன்பு துண்டித்தது. கடந்த 2019 முதல் சில விதிவிலக்குகளை மட்டுமே செய்தது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அசாதாரணமாக வலுவான பருவமழை காரணமாக ஏற்பட்டது, பெருமழை பெய்ததால், பெரிய நிலப்பரப்பு தண்ணீருக்கு அடியில் உள்ளது. இதன் விளைவாக 10 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. பாகிஸ்தானின் காலநிலை அமைச்சர் வெள்ளம் கற்பனைக்கு எட்டாத விகிதத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com