பாக்கு தோட்டத்தில் உலா வரும் யானைகள்

பாக்கு தோட்டத்தில் உலா வரும் யானைகள்

கோவை அருகே வனப்பகுதியில் இருந்து வழி மாறி, பாக்கு தோட்டத்தில் 3 காட்டு யானைகள் தனது குட்டியுடன் தஞ்மடைந்துள்ள டிரோன் வீடியோ காட்சி வெளியானது. கோவை மாவட்டம், ஆலாந்துறைப்பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 காட்டு யானைகள் செம்மேடு பாக்கு தோட்டத்தில் முகாமிட்டது. தகவலறிந்து வந்த 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 6 யானைகளை காட்டுக்குள் விரட்டிய நிலையில், மீதமுள்ள 3 யானைகள் தனது குட்டியுடன் மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்திற்குள் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனை விரட்ட முயன்றுள்ள வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து கண்காணித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com