"இந்தியாவில் முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டும் மதசார்பற்ற கழகம்....” கே.எஸ்.அழகிரி!!

"இந்தியாவில் முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டும் மதசார்பற்ற கழகம்....” கே.எஸ்.அழகிரி!!

இன்று 70 வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

70 வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் தங்களுடைய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான ஒரு சிறந்த தோழராக திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு விளங்குவதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டுகிற மதசார்பற்ற அமைப்பாக திராவிட முன்னேற்ற கழகமும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

மேலும் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளர் என்று அறிமுகம் செய்த பெருமை ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு என்று தெரிவித்த அவர் அதேபோல வரலாற்று சிறப்புமிக்க ராகுல் காந்தி அவர்களுடைய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் துவக்கி வைத்த பெருமையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com