”77 ஆண்டுகளில் நாடு பல வளர்ச்சிகளை அடைந்தாலும்; இன்னும் நாட்டில் ஆபத்து இருக்கிறது”நல்லக்கண்ணு பேட்டி!

”77 ஆண்டுகளில் நாடு பல வளர்ச்சிகளை அடைந்தாலும்; இன்னும் நாட்டில் ஆபத்து இருக்கிறது”நல்லக்கண்ணு பேட்டி!

77 ஆண்டுகளில் நாடு பல வளர்ச்சிகளை பார்த்தாலும், இன்னும் நாட்டில் ஆபத்து இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டியளித்துள்ளார்.

77வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மூவர்ண கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நாட்டில் எல்லா வளர்ச்சியும் ஏற்பட வேண்டும்; அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என இன்னாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளில் பல வளர்ச்சி அடைந்தாலும், இன்னும் நாட்டில் ஆபத்து இருக்கிறது. மாதவாத சக்திகளும், சாதியவாத சக்திகளும் தங்களை வளர்த்துக்கொண்டு நாட்டை சீரழிப்பதற்கான முயற்சிகள் நீடிக்கிறது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மதவாத, சாதிய சக்திகள் வளர்வதை தடுக்க வேண்டும்.  மதவாத, சாதியவாத சக்திகளை முறியடிக்க மக்களை ஒன்றுதிரட்டி போராட வேண்டும் என கூறினார்.

மேலும் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்காக நாம் போராட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com