ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் கார்த்திகி...1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய முதலமைச்சர்!

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் கார்த்திகி...1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய முதலமைச்சர்!

ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்பட இயக்குநருக்கு ஒருகோடி ரூபாய் பரிசு தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானைகளை பராமரிக்கும் பொம்மன் - பெள்ளி என்ற பாகன் தம்பதியை மையமாகக்கொண்டு ஊட்டியை சேர்ந்த இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், ’தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை எடுத்தார். சமீபத்தில் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த இயக்குநர் கார்த்திகி அவரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது இயக்குனர் கார்த்திகிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகி, தமிழ்நாட்டிற்காக ஆஸ்கார் விருது வாங்கியது மிக மகிழ்ச்சியாக உள்ளதாகவும், பெண்ணாக இருந்து ஆஸ்கார் விருதை வாங்கியது பெருமையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com