ஓட்டுனர் உறங்கியதால் கரை தட்டிய விசை படகு!

ஓட்டுனர் உறங்கியதால் கரை தட்டிய விசை படகு!

மயிலாடுதுறை அருகே, மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும் பொழுது, படகின் ஓட்டுனர் உறங்கியதால், படகு கரை தட்டியுள்ளது.

கடந்த 8 ம்  தேதி இரவு, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு, வலையை இழுத்து கொண்டு கரை திரும்பியுள்ளனர்.

அப்போது, விசை படகை ஓட்டி வந்த மீனவர் தூங்கியதாக கூறப்படுகிறது. அதனால், சந்திரபாடி மீனவர் கிராமத்தில் விசைப்படகு தரைதட்டி கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த மீனவர்கள் கோட்டுச்சேரி பகுதி மீனவ கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கோட்டுச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் உறவினர்கள் 3  படகுகளில் வந்து சந்திரபாடி மீனவர்கள் உதவியுடன் விசைப்படகை மீட்டு ஊருக்கு எடுத்து சென்றனர். 

விசைப்படகு கடலில் கவிழாமல் கரை ஒதுங்கியதால் மீனவர்களுக்கு எந்த வித பாதிப்புமின்றி அதிர்ஷ்டவசமாக வீடு திரும்பினர். விசைப்படகை மீனவர்கள் மீட்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com