அமமுக நிர்வாகியை தாக்கிய அதிமுக தரப்பினர்...ஈபிஎஸ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

அமமுக நிர்வாகியை தாக்கிய அதிமுக தரப்பினர்...ஈபிஎஸ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

அமமுக நிர்வாகி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிவகங்கையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமான மூலம் மதுரை சென்றார். அப்போது, ராஜேஸ்வரன் என்ற அமமுக நிர்வாகி எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாகப் பேசி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக கூறி அதிமுகவினர் ராஜேஸ்வரனைத் தாக்கினர். 

இந்நிலையில் அதிமுகவினர் தன்னைத் தாக்கியதாக அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 5 பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com