சுங்கச்சாவடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம்!

சுங்கச்சாவடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம்!

நாகர்கோவில் அருகே நான்கு வழி சாலையில் சுங்கச்சாவடி அமைத்ததை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தது காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பணிகள் முடிவடையும் முன்னர் விதிகளுக்கு புறம்பாக சுங்கசாவடி அமைத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

சுங்கச்சாவடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து காவல் கிணறு நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பணிகள் முடிவடையும் முன்னர் நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பயணம் செய்பவர்களுக்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விதிகளுக்கு முரணாக திறப்பு

இந்நிலையில் பணிகள் முடிவடையும் முன்னர் விதிகளுக்கு புறம்பாக சுங்கச்சாவடி அமைத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏற்கனவே நாங்குநேரியில் இருந்து 44 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பதி சாரம் பகுதியில் டோல் கேட் அமைத்தது விதிகளுக்கு புறம்பானது என்றும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியினர் டோல்கேட் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com