அதிமுக திமுக எந்த அரசும்  நிரந்தரமில்லை - செவிலியர்கள் போராட்டத்தில் சீமான் பேச்சு

செவிலியர்கள், தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை பணி நிரந்தம் செய்யகோரியும் போராட்டம்
அதிமுக திமுக எந்த அரசும்  நிரந்தரமில்லை  - செவிலியர்கள் போராட்டத்தில் சீமான் பேச்சு

செவிலியர்கள் போராட்டம் 

கொரானா கால கட்டத்தில் தேவதைகளாக தெரிந்தவர்கள் இப்போது தேவையற்றவர்களாக தெரிகிறார்கள் . செவிலியர்களை வீதியில் இறங்கி போராட  வைத்துள்ளது.  செவிலியர்கள் போராட்டத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் வீதியில் இறங்கி போராடுவது மிகவும் அசிங்கம் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை நிரந்தரம் பணியாளர்களாக ஆக்க்கிட வேண்டும் . 

 ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளரகளாக செயல்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் வரபோகிறது என தெரியவில்லை. அர்பணிப்போடு செயல் படுத்தபடக்கூடியவர்கள். வேலையில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. காரணங்கள் பலவற்றை கூறுகின்றனர்.செவிலியர்களுக்கு குழு  காலம் கடத்துவது நீர்த்து போக செய்தல் எதற்கு குழு இதுவரை 38 குழு இருக்கு. புழு கூட நகருமே தவிர குழு நகராது .

 ஈசா யோகா 

 ஈசா யோகாதனிப்பட்ட அரசு .அவர் கூப்பிட்டால் மோடி வந்து மணிஅடிக்கிறார் . எப்படி இவ்வளவு இடம் ஒரு தனி மனிதனுக்கு சொந்தமாக இருக்கமுடியும் அதிகாரம் மிக வலிமையானது. 

நிரந்தர பணியாளர்கள் 

ஆசிரியர்கள் செவிலியர்களுக்கு பணம் இல்லை என்றால் அப்போ மது விற்பனை செய்து  கோடி கணக்கில் வரக்கூடிய பணத்தை என்னதான் செய்கிறது அரசு ஆளும்  அரசாங்கம் திவால் ஆகிவிட்டதா  ?அன்றைக்கு ஒன்றும் இன்றைக்கு ஒன்றும் பேச கூடிய அரசு .அதிமுக திமுக எந்த அரசும்  நிரந்தரமில்லை. 

சாலை சுத்தம் செய்யக்கூடிய துப்புரவு பேராசிரியர்கள் ஆசிரியர்கள் எல்லாருமே ஒப்பந்த அடிப்படையில் எடுப்பதன் காரணம்  எடுத்தால் நிரந்தர பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் அதுதான் காரணம் .

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com