''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா

சனாதனத்தை பற்றிய சர்ச்சைக்கு ஒன்றும் வேலையே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் தன்னுடைய இல்லத்தில் உள்ள பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்திந்தார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்பதை சொல்லி போராடியவர். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புரட்சித் தலைவரும் அவரைப்போலவே செயல்பட்டவர். சமூக நீதிக்காக அரும்பாடு பட்டவர். ஆணும் பெண்ணும் சம உரிமை பெற வேண்டும் என்பதில் அதிகமாக முன் நின்று குரல் கொடுத்தவர் பெரியார் அவர்கள்.

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு எங்கள் இருவரும் தலைவர்களும் பயணித்த அதே வழியில் நாங்களும் பயணிக்கின்றோம் அதே சமயம் பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டுள்ளவர் நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று என்றார் புரட்சித் தலைவர் அவர்கள் ஆன்மீகத்தில் அதிக பற்று உள்ளவர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நானும் ஆண்டவன் அருளால் தான் எல்லாம் இயங்குகிறது என்ற கொள்கையை கொண்டவர்கள் என் அண்ணாவின் அனைவரும் போட்டி பொறாமைகள் இன்றி ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறோம்

முன்னேற்றம் இருக்கிறது நிச்சயம் அதை நாங்கள் செய்து காட்டுவோம் ஏனென்றால் புரட்சித் தலைவர் வழியில் நாங்கள் வந்திருக்கிறோம் எங்களுக்கு மக்களாட்சி வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.  அது எங்களால் தான் கொடுக்க முடியும் அதற்கான பயணத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம் முயற்சியும் செய்து கொண்டிருக்கிறோம். அதற்கான வெற்றியும் கொண்டு இருக்கிறது அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எங்கள் கட்சியில் உள்ள இணைப்பிற்கு எங்களுக்குள் தான் ஒற்றுமை வரவேண்டும்.

பேச்சளவில் மட்டும்தான் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது தவிர முழுமையாக அவர்கள் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. 28 மாதங்கள் கடந்த பிறகு அண்ணாவின் பிறந்தநாளில் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று அறிவித்து அது போல கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சொன்னதே கொடுக்கிறீர்கள் அப்படி கொடுக்க வேண்டும் என்பதால் உங்களுடைய எண்ணம் இரண்டாவது நாளில் அதில் பல பிரச்சினைகள் வருகிறது எங்க வீட்டில் உள்ள பையனுக்கு அவர் விண்ணப்பம் செய்யவில்லை. ஆனால் அவருக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது விண்ணப்பம் செய்யாதவர்களுக்கெல்லாம் பணம் செலுத்தப்பட்டு இருக்கிறது என்று குறுஞ்செய்தி வந்திருக்கிறது எப்படி நடந்தது இவருடைய வங்கி கணக்கு எண் அவர்களுக்கு எப்படி தெரியும் இது போன்ற தமிழகம் முழுவதும் நடந்திருக்குமோ என்ற குழப்பம் வருகிறது.

அண்ணாவின் பிறந்தநாள் வரை இந்த சந்தேகம் வரவில்லை இவர்களால் எப்படி கொடுக்க முடியும் என்று சந்தேகம்தான் இருந்து வந்தது இப்போது கணக்கில் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டடோம்  என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

சனாதனத்தை பற்றி சர்ச்சைக்கு ஒன்றும் வேலையே இல்லை. எந்த தெய்வமும் யாரையும் ஒன்றும் பிரித்துப் பார்க்கவே இல்லை.மக்கள் பிரச்சனையை யாரும் கேட்கக்கூடாது சொல்லக்கூடாது தொலைக்காட்சிகளில் வரக்கூடாது அரசாங்கத்தை பற்றி எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பிரச்சனையை திமுக அரசியல் தூண்டிவிடுகிறது என்பதைப் போலத்தான் நான் இதை பார்க்கிறேன்.

மக்கள் படும் பெரும்பாடுகளால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லை என்பது பிரதிபலித்து வருகிறது திமுக அரசால். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் வெற்றி பெற்றால் திமுகவை போல அல்ல மாவை பார்த்திருப்பீர்கள் அவர்கள் எப்படி எதுவும் சரியில்லை என்றால் எப்படி வெளிவருவார்களோ அதைப்போல நாங்களும் இருப்போம்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அங்கே மத்திய அரசாங்கம் இருக்கும்போது தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய உரியவற்றை செய்ய வேண்டும் ஏமாற்றக்கூடாது தமிழ்நாட்டு மக்களை. மக்களுக்காகவே இந்த ஆட்சி என்பதை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வது” என கூறினார்.

அண்ணா திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் நன்றி தெரிவித்து விலகி இருக்கிறேன் என்று முன்பு சொல்லி இருந்தீர்கள் அதனால் தான் கட்சி தோற்றதா என்ற கேள்விக்கு?

”என்னிடத்தில் இல்லை ஒரு சிறு பிள்ளையிடம் இந்த கேள்வியை கேட்டால் கூட ஆமாம் என்று ஒத்துக் கொள்ளும் இதற்கு பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. இது தான் உண்மை.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்கள்தான் முக்கியம் தமிழ்நாட்டு விவசாயிகள் தான் என்று முக்கியம் என்று மன்சராக இருந்த ஜெயலலிதா  சொன்னார். மருத்துவமனையில் இருக்கும் பட்சத்திலும் கூட அவர் அதற்கான முயற்சிகளை எடுத்தார்.  உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வேலையை கர்நாடகம் செய்யாமல் முதல் வேலையாக தமிழக அரசு எங்களுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும்”,  என்று தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com