"பாஜக அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டி வருகிறது" - அண்ணாமலை

பாஜக அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டி வருவதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை சாடியுள்ளாா்.

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை ”என் மண் என் மக்கள்” நடைபயணத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மேற்கொண்டாா். ருக்குமணி பாளையம் சாலையில் தொடங்கிய நடைபயணம் பந்தலடி, மேலராஜ வீதி வழியாக தேரடியில் நிறைவடைந்தது. அப்போது கட்சியினா் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். 

தொடா்ந்து அங்கு பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல எனவும், அது ஒரு குடும்பம் மட்டுமே வளர்வதற்கான ஆட்சி என்றும் கூறினார். மேலும் பாஜக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் திமுக ஸ்டிக்கா் ஒட்டி வருவதாக குற்றம்சாட்டினாா். 

குளங்களுக்கு தாமரை தேவைப்படுவதுபோல், தமிழ்நாட்டிற்கும் தாமரை தேவைப்படுகிறது என குறிப்பிட்ட அண்ணாமலை, மன்னார்குடியில் 2021-ம் ஆண்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்போவதாக தொிவித்த அமைச்சா் டி.ஆர்.பி.ராஜா ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை என சாடினாா்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com