"மாஞ்சோலை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்" - தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

"மாஞ்சோலை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்" - தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மாஞ்சோலை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் தொழிலாளர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாட்களில் 75 சதவீத கருணைத் தொகையை தொழிலாளர் ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றக் கூடாது என நீதிமன்ற உத்தரவுப்படி, மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் தளர்வு செய்யப்பட்டு வீடுகளை தற்போது காலி செய்ய தேவையில்லை என்றும் தனியார் எஸ்டேட் நிறுவனம் மாஞ்சோலை மக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com