இன்னும் 3 ஆண்டுகள் தான்...எல்லாம் மாற்றப்படும்...அமைச்சர் பேச்சு!

இன்னும் 3 ஆண்டுகள் தான்...எல்லாம் மாற்றப்படும்...அமைச்சர் பேச்சு!

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில், அனைத்து தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

மேம்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர்:

சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், அம்பத்தூரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில்,  நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு அதிகாரிகளுடன் மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில், 600 க்கும் மேற்பட்ட தரை பாலங்கள் மேம்பாலங்களாக மேம்படுத்தபட்டுள்ளது என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் என்றும் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com