போக்குவரத்து தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலூரில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த கோரி ஓய்வு பெற்ற அமைப்பு சார்பாக கடலூர் போக்குவரத்து பணிமனை முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஞ்சப்படி உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வேண்டும், வாரிசுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com