சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை உள்ளதா?-பொன்முடி

உண்மையிலேயே சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து ஆளுநருக்கு அக்கறை இருக்குமானால், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.  

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர் சங்கரய்யா என்றும், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக அனுப்பப்பட்ட கோப்பு இன்னும் நிலுவையில் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

உண்மையிலேயே சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து ஆளுநருக்கு அக்கறை இருக்குமானால் வரும் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு முன்னதாகவே சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com