அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர்...! விரைவில் பட்டமளிப்பு விழா..?

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் விரைவில் பட்டமளிப்பு விழா..! புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர் உறுதி
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற  துணைவேந்தர்...! விரைவில் பட்டமளிப்பு விழா..?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக, துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில்  பணியாற்றி வரும் பேராசிரியர் க.ரவி என்பவரை 11 வது துணைவேந்தராக, நியமனம் செய்தார்.

அவர் இன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால், வேலைவாய்ப்பு பெறுவதில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் ஆளுநர் மற்றும் உயர்கல்வித் துறையில் இது பற்றி எடுத்து கூறி  பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணைவேந்தர் க.ரவி உறுதியளித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com