ஆபரேஷன் காவேரியின் ஆன் போர்டு...! சூடானில் இருந்து 70 தமிழர்கள் மீட்பு...!

ஆபரேஷன் காவேரியின் ஆன்  போர்டு...!  சூடானில் இருந்து  70 தமிழர்கள் மீட்பு...!
Published on
Updated on
1 min read

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது.   சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கடந்த 4 நாளாக விமானம் மூலம் 210 தமிழர்கள் மீட்கப்பட்டு டெல்லி, மும்பை, பெங்களூரூ வழியாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சூடானில் இருந்து மீட்கப்பட்ட திருவாரூர், நாகை, காரைக்கால், தஞ்சை, கிருஷ்ணகிரி, பாண்டி, கடலூர், மதுரை, விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70 தமிழர்கள் கொச்சி விமான நிலையம் வந்தனர்.

கொச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாழ்வு துறை ஆணையக துணை இயக்குனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதில் சூடானில் இருந்து வரக்கூடியவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றுடன் வர வேண்டும். இந்த சான்று இல்லாமல் வந்த 17 பேர் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் மீட்கப்பட்ட 53 பேரை அவர்களது சொந்த ஊர்களுக்கு வேன், கார்களில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com