ஓபிஎஸ் வீட்டில் முதலமைச்சர் திடீர் விசிட்... கோரிக்கை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!!

ஓபிஎஸ் வீட்டில் முதலமைச்சர் திடீர் விசிட்... கோரிக்கை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி உயிரிழந்தார்.  அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நேற்றைய தினம் தேனியில் இருந்து சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு ஓ பன்னீர்செல்வம் வருகை புரிந்திருந்தார்.  அதன் தொடர்ச்சியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இல்லத்தில் கூடியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓபிஎஸ் தாயாரின் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேரில் வருகை புரிந்தார்.  அப்போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

இரங்கல் தெரிவித்த பின் வீட்டின் வாசல் வரை வந்து ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் வழி அனுப்பினார்.  அப்போது அங்கே கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொடநாடு கொலையாளி எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஓபிஎஸ் அவர்களின் தாயார் மறைவையொட்டி அவருக்கு ஆறுதல் தெரிவித்தோம் என்று பேசியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்த பின் காரில் ஏறிய உதயநிதி ஸ்டாலினிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடியை கைது செய்ய வேண்டும் எனவும் கொடநாடு கொலை வழக்கை நியாயமாக விசாரிக்க வேண்டும் எனவும் இதை இளைய தளபதி சீக்கிரமாக செய்ய வேண்டும் என்றும் முழக்கங்களுடன் கோரிக்கை வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com