" மத்திய அரசு ஊர் ஊராக சென்று 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் " - திருமாவளவன்.

" மத்திய அரசு ஊர் ஊராக சென்று  'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் " - திருமாவளவன்.
Published on
Updated on
2 min read

அலட்சியத்தின் காரணமாக ஒடிசா ரயில் விபத்து நடந்துள்ளது என்றும், விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். 

அலட்சியத்தின் காரணமாக ஒடிசா ரயில் விபத்து நடந்துள்ளது என்றும், விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் பேசுகையில்:- 

" மத்திய அரசு அலட்சியமாக இருந்ததன் காரணமாக ஒடிசா ரயில் விபத்து நடைபெற்றுள்ளது என்ற கருத்து வலுவாக எழுந்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் இதுபோன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் வெறுப்பு அரசியலை விதைப்பதிலும், சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வகையிலே இந்து சமூகத்தினரை அணி திரட்டுவதில் கவனம் திரட்டுகிறார்கள்", என்று குற்றம் சாட்டினார்.  

அதனைத்தொடர்ந்து, " ஊர் ஊராக சென்று ' ஜெய் ஸ்ரீ ராம் ' சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் என்றும், . சாதி உணர்வுகளை தூண்டுகிறார்கள் என்றும், ஹிஜாப் பிரச்சனைகளை எழுப்புகிறார்கள் நாவும் சாடியவர், மத்திய அரசு வளர்ச்சி பாதுகாப்பு உள்ளிட்டவர்களில் கவனம் செலுத்தாமல் இது போன்ற விஷயங்களில் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். 

மேலும், " இவ்வளவு பெரிய விபத்து நடைபெற்று இருக்கிறது. இந்நேரத்தில் அவர்களுடன் நாம் துக்கத்தில் பங்கேற்க வேண்டும். ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளையும் தனியார் மயம் ஆக்குவதில் மத்திய அரசு தீவிரம் செலுத்தி வருகிறது. அதனால் இது போன்ற விஷயங்களில் அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது", என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கூறுகையில்:-

ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.  மேலும், அவர் பதவியில் இருந்து கொண்டே இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய முடியாது என்றும்,  ரயில்வே துறை அமைச்சர் இந்நேரத்தில் பதவி விலகினால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

அதையடுத்து, "  உண்மையிலேயே ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருப்பதை தொழில் நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கவாச் சிஸ்டத்தை முறையாக பயன்படுத்தி இருக்க வேண்டும் ", என்றும் கூறினார். 

மேலும்,  மீட்புப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. தனது தந்தையின் நூற்றாண்டு விழாவை ரத்து செய்துவிட்டு மாநிலத்தில் ஒரு நாள் தூக்கம் அனுசரிக்கப்பட்டிருக்கிறது தமிழக அமைச்சர்கள் குழு களத்திற்கு சென்று இருக்கிறது என்று பாராட்டினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com