பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மர்ம கும்பல்...போலீசார் விசாரணை!

சேரன்மகாதேவி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மர்ம கும்பல்...போலீசார் விசாரணை!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு 2 இருசக்கர வாகனங்களில் கையில் மதுபானங்களுடன், 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் போட வந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் பெட்ரோல் பங்க் ஊழியரை காலால் மிதித்தும், அடித்தும் தாக்கினார். இந்த சம்பவம் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. 

முன்னதாக இதே கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், சேரன்மகாதேவி பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாகவும், அருகே உள்ள மதுபான கடையில் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது... 

இந்த சம்பவங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, சரவணன், பெருமாள், பிச்சையா, மகாராஜன் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com