இறந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை! நியாயம் கேட்டவர்களை தாக்கிய காவல்துறை!!

இறந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை! நியாயம் கேட்டவர்களை தாக்கிய காவல்துறை!!

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியல் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அடித்து, இழுத்து தள்ளிய காவல்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டுதள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செங்கோட்டையை சேர்ந்த வெல்டிங் பட்டறையில் கூலி தொழிலாளியாக பணி புரிபவர் ஜெயராம் இவரது மனைவி இந்திரா தேவி பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21 ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (23.05.23) இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் தாய் உயிர் இழந்துள்ளார். இந்த தகவலை மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல்  தீவிர சிகிச்சை  பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதாக  கூறிவந்துள்ளனர். 

ஆனால் இந்திரா தேவியின் தாய் உள்ளே சென்று பார்த்தபோது மகளின் நாக்கு வெளியே வந்த நிலையில் மூக்கில் ஆக்சிசன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பார்த்த தாய் சந்தேகம் அடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது நகர வடக்கு காவல் துறையினர் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டனர். அதற்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறுக்கவே அவர்களை ஆண்கள், பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் தாக்கியும் சாலையிலிருந்து தள்ளி மருத்துவமனை வளாகத்திற்குள் தள்ளி விட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் மிகுந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களது உறவுக்கார பெண் மர்மமான முறையில் இறந்திருப்பதற்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் அடித்து, விரட்டி, தள்ளிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com