" இந்த அரசு வாய் சவடாலான அரசாக இருக்கே தவிர செயலில் இல்லை.....!" - செல்லூர் ராஜு.

ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட அரசு.......
" இந்த அரசு வாய் சவடாலான அரசாக இருக்கே தவிர செயலில் இல்லை.....!" - செல்லூர் ராஜு.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசுகையில், 10 லட்சம் பேர் பார்த்து அக மகிழும் சித்திரை திருவிழாவில் இந்த ஆண்டு மிக மோசமாக விரும்பத்தகாத சம்பவம் நடந்நதுள்ளது எனவும், 5 பேர் உயிரிழந்தது மனவருத்தத்தை அளிக்கிறது எனவும்  கூறினார்.

மேலும், திருவிழாக்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரவுடிகளை பிடித்து முன்னெச்சரிக்கையாக சிறையில் அடைப்போது வழக்கம். இருந்தும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது என்றும்,  250 மீட்டர் பகுதியில் 3பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார். 

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள்  நிகழும்போதும், அறியாமையில் இந்த அரசு உள்ளது என்றும்,  முழுக்க முழுக்க இந்த உயிரிழப்புகளுக்கு அரசாங்க குறைபாடே காரணம் என்றும் கூறினார். 

அதோடு, மதுரை சித்திரை திருவிழா வரலாற்றில் இதுவரை துயர சம்பவங்கள் நடந்ததில்லை. வரலாற்றில் இப்போது மட்டுமே இவ்வாறு நடக்கிறது; மேலும், அதிமுக ஆட்சியில் தண்ணீர் அதிகமாக வந்த போது உயிரிழப்பு இல்லை. இப்போது தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும், திமுக ஆட்சியும், நிர்வாகமும் குளறுபடியும், குழப்பமுமாக  உள்ளது என விமர்சித்தார். தொடர்ந்து, இந்தியாவுக்கு முன்னோடியாக  தமிழ்நாடு அரசு உள்ளது என முதல்வர் மட்டுமே சொல்லுகிறார் என்றும் கூறினார்.

மேலும், திருக்கல்யாணம் மற்றும், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளுக்கு விஐபி பாஸ் ரத்து செய்ய வேண்டும் என்றும், இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் அரசு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மற்றும், ஆற்றுக்குள் இறங்குபவர்களை காவல்துறை கண்டித்து எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும் என்றும், ஆற்றில் அழகர் மட்டும் தான் இறங்க வேண்டும். ஆனால் எல்லோரும் இறங்குகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 

அதனையடுத்து, "எங்கள் ஆட்சியில் சாரம் கட்டி தனி வழியில் சென்றனர். இப்போது அழகருக்கு முன்பாகவே இவர்கள் இறங்கிவிடுவார்கள். ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட அரசு. திராவிட மாடல் ஒன்றும் இல்லை', இந்த அரசு வாய் சவடாலான அரசாக இருக்கே தவிர செயலில் இல்லை",  என்றும் விமர்சித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், "ஆளுநர் கருத்தை ஆதரிக்கவில்லை. ஆளுநரை திமுகவினர் விமர்சனம் செய்யும் போது ஆளுநர் எப்படி சும்மா இருப்பார்..? என்றும் கேள்வி எழுப்பினார். கூடவே,  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில்  வெளிப்படைத் தன்மையில்லை என்றும், மீனாட்சி சுந்தரேசுவரர், அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் விஐபி தரிசனங்களை திருப்பதி போல் ரத்து செய்ய வேண்டும்  எனவும் கேட்டு கொண்டார்.

மேலும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிழ்கவை அரசு முறையாக கண்காணிக்காததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்தது  என்றும், கடந்த ஆண்டு 2 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு 5 பேர் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றும்,  தடுப்பு அணையின் 250 மீட்டர் பகுதியிலேயே 3 பேர் இறந்து உள்ளனர் எவ்வும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com