"அவருக்கு எதுக்குங்க சீப்பு?" ஜெயக்குமாரை கலாய்த்த அமைச்சர் உதயநிதி!!

"அவருக்கு எதுக்குங்க சீப்பு?" ஜெயக்குமாரை கலாய்த்த அமைச்சர் உதயநிதி!!

சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என கடந்த 100 ஆண்டுகளாக திமுக பேசிவருவதாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசிய பேச்சு பாஜக மற்றும் நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்து பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை விமான நிலையத்திற்கு  வந்தடைந்தார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவா், சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என கடந்த 100 ஆண்டுகளாக திமுக பேசி வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இது திசை திருப்பும் நோக்கம் அல்ல என தெரிவித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று நடைமுறை படுத்தியது திமுக தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பின்னர் ஜெயக்குமார் தன்னை விமர்சனம் செய்தது குறித்து பேசும் பொழுது, ஜெயக்குமார் தலையில் முடி இல்லை அவரால் சீப்பு வைத்து சீவ முடியாது என்பதை போல் செய்கையில் கிண்டல் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com