ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - திருமாவளவன்

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் -  திருமாவளவன்

ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே காரணம்., ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவால் புதிதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை என்பதால்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

திருமோகூரில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்திப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது., ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து 200க்கும்  மேற்பட்டோர் உயிரிழப்பு 1000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம்  மத்திய அரசின் இயலாமையை காட்டுகிறது. 

காவட்ச் கவச பாதுகாப்பு கருவியை பயன்படுத்தி இருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம். துறைமுகம், ரயில் நிலையம், விமான நிலையம், மின் நிலையம் எல்லாவற்றையும் தனியாருக்கு விற்பதில் அக்கறை காட்டுவதால் தான் இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு தார்மிக பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். 

இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய உயர் மட்ட குழு அமைப்பு புலன் விசாரணை நடத்த வேண்டும். மக்களை காப்பதிலும் அவர்கள் உயிர்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தாத மத்திய அரசு வெறுப்பு அரசியலை விதைப்பதில் பாஜக அரசு முனைப்போடு இருக்கிறது. 

விபத்து நடந்த உடன் தமிழக முதல்வர் சிறப்பாக பணியற்றியது வரவேற்கதக்கது. எதிர்காலத்தில் இதுபோன்று விபத்துகள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விசிக கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல்.கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாதியத்தை தூக்கி பிடித்தவர்களுக்கு சம்மட்டியடி வழங்கி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. நீதிமன்றத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சமூக வலைத்தளங்களில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தில் வழக்காடி நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. 

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் உள்ளது. அத்தனை வழக்குகளிலும் குற்றம்சாட்டியுள்ள குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. கைது செய்யப்படவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக மதுரையில் ஜூன் 12 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.காவேரி மேலாண்மை ஆணையம் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது என கூறியுள்ளது. கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டி.கே.சிவகுமார் பேசியுள்ளார். நாம் நமது மக்களுக்காக உடன் நிற்கவேண்டும். கூகுள் வரைபடத்தில் மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டது குறித்த கேள்விக்கு.?

பதில் அளித்த திருமாவளவன் மதுரை விமான நிலையம் முத்தரையர் பன்னாட்டு விமான நிலைய என வைத்திருப்பது அந்தந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்களின் தூண்டுதலின் பேரில் இளைஞர்கள் செய்கின்ற செயல் இது ஒரு தனிப்பட்ட நபருடைய செயல் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com