விநாயகர் சதுர்த்தி கோயம்பேடு அங்காடியில் குவிந்த மக்கள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சென்னை கோயம்பேடு அங்காடியில் பொது மக்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு அங்காடியில் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வருகை தந்துள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாகவே விடுமுறையின் காரணத்தினால் கோயம்பேடு சந்தையை பொறுத்தவரையிலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குறைந்துள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையினால் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. 

குறிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலைகள், வாழைப்பழம், மாவிலை, தோரணம், எருக்கம் பூ, அருகம்புல் தேங்காய், பூ பழங்கள் பொறி உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணத்தால் வியாபாரிகள் பொருட்களை வாங்கிய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதால் நிறைய நஷ்டம் எற்ப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். மேலும், வெளியூர்களில் இருந்து வாகனங்களில் காய்கறிகள் கரும்பு உள்ளிட்டவை கொண்டுவரப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட உடன் காவல்துறையினர் உடனடியாக கூட்ட நெரிசலை கட்டுபடுத்தினர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com