நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்  மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? - டிடிவி  கேள்வி! 

நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்  மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்  மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? - டிடிவி  கேள்வி! 
Published on
Updated on
1 min read

நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்  மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் குறிப்பில் பதிவிட்டுள்ளதாவது, நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள தி.மு.க. அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?  

அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது.மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்துகொள்வதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள தி.மு.க. அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? (1/5) @CMOTamilnadu

— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 7, 2022

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com