செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்... காரணம் என்ன?

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்... காரணம் என்ன?

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திடீரென 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் அனிதா ஆகியோர் பயிற்சி மருத்துவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் தரப்பில் பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கண்சிகிச்சை பிரிவு  கட்டிடத்தில் ஏசியில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியதால் அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் கூடுதல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com