எலியை விழுங்க முடியாமல் தவித்த பாம்பை மீட்ட இளைஞர்...

சாலை நடுவில் எலியை விழுங்க முடியாமல் மயங்கிய நிலையில் இருந்த பாம்பை மீட்டு காட்டில் விட்ட இளைஜ்றை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
எலியை விழுங்க முடியாமல் தவித்த பாம்பை மீட்ட இளைஞர்...

ராமநாதபுரம் | சாயல்குடியில் இருந்து கமுதி செல்லும் சாலையின் நடுவே நான்கு அடி நீளம் உள்ள அரிய வகை பச்சைநிற பாம்பு  எலியை விழுங்க முடியாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.

அப்போது  உடற்பயிற்சிக்குச் சென்ற இளைஞர் சாலையில் மயங்கிய நிலையில் கிடந்த நான்கு அடி நீளம் உள்ள அரிய வகை பச்சைநிற பாம்பை வாகன விபத்துகளில் இருந்து பாதுகாத்து, அந்த பாம்பை அச்சமின்றி தன் கையால் பிடித்தாரி.

பின், விழுங்க முடியாமல் வாயில் வைத்திருந்த எலியை  வெளியே எடுத்துவிட்டு பாம்பை உயிருடன் சாலையில் இருந்து  வனப்பகுதியில் விடுவித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அரியவகை பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்த  அந்த இளைஞருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com