
2023 ஆம் ஆண்டிற்காக 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
2022-2023 கல்வி ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டன. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துனைத் தேர்வு கடந்த ஜீன் மாதம் தொடங்கியது. இந்த துணைத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அரசு தேர்வுகள் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.