தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு....!!

தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு....!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 9லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி பொதுதேர்வுகள் நடைபெற்று வருகின்றன.  அந்த வகையில் முதற்கட்டமாக மேல்நிலை வகுப்புகளுக்கான 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிவுற்ற நிலையில், 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இன்று ஆரம்பமாகிறது.  இந்த தேர்வினை 9லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 4025 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.  

மேலும் இத்தேர்வினை 13ஆயிரத்து 151 மாற்று திறனாளி மாணவர்களும், 264 சிறை வாசிகளும் எழுத இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் நடைபெற்று முடிந்த செய்முறைத்தேர்வில் 1லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதாதது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டது....!!!