சொகுசு கார்களில் குட்கா கடத்தி வந்த 2 வட மாநில இளைஞர்கள் கைது!

சொகுசு கார்களில் குட்கா கடத்தி வந்த 2 வட மாநில இளைஞர்கள் கைது!

இரண்டு சொகுசு கார்களில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான நான்கு டன் எடை கொண்ட குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி வந்த, இரண்டு வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாலாஜாபேட்டை காவல்துறையினர் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, பெங்களூரு பகுதியில் இருந்து சென்னையை நோக்கி சந்தேகிக்கும் விதமாக வந்த இரண்டு கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை செய்ய முயன்ற போது, இரண்டு கார்கள் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இருப்பினும் காவல்துறையினர் இரண்டு கார்களையும் மடங்கிப் பிடித்துள்ளனர்.

காவல்துறையினர் மடக்கி பிடித்ததை தெரிந்து கொண்ட நிலையில், இரண்டு காரில் இருந்த நான்கு நபர்கள் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அதில் இரண்டு நபர்கள் தப்பி ஓடிய நிலையில், இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இரண்டு கார்களையும் சோதனை செய்ததில், இரண்டு கார்களிலும் நான்கு டன் அளவு கொண்ட குட்கா போன்ற போதை பொருட்கள், 4 லட்ச ரூபாய் மதிப்பில் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து வாலாஜாபேட்டை காவல் துறையினர் இரண்டு சொகுசு கார் மற்றும் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான 4 டன் எடை கொண்டு குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இரண்டு கார்கள் மூலம் குட்கா போன்ற போதை வஸ்துக்களை கடத்தி வந்த வசீர் ராம்(25) பீர் உஷா(22) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து வாலாஜா காவல் நிலையத்தில் வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க || "அரசு பள்ளி மூடப்படுகிறது என்றால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது" பொன். ராதாகிருஷ்ணன்!