பரீட்சை எழுதியது 16 பேர் - பாஸ் ஆனது 8 பேர் - பெற்றோர்கள் அதிர்ச்சி

பரீட்சை எழுதியது 16 பேர் - பாஸ் ஆனது 8 பேர் - பெற்றோர்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கர் படித்து வருகின்றனர். 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 12க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில்12 மாணவர்கள் நான்கு மாணவிகள் என மொத்தம் 16 மாணவர்கள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 48 அரசு பள்ளிகளில் 100% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்திருந்தனர்.

மேலும் படிக்க | பொருளாதாரத்தை உயர்த்தவே 2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது - ஜி.கே.வாசன்

அதே நேரத்தில் டி பொம்மிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 16 மாணவர்களின் எட்டு பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்திலேயே தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி என்ற பெயரை டி.பொம்மிநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது. அதிகமான மாணவ மாணவிகளை கொண்ட அரசு பள்ளிகளே 100 சதவீத தேர்ச்சியை பெற்றபோது வெறும் 16 மாணவர்களை மட்டுமே கொண்ட தீபம் விநாயகமூர்த்தி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி 50 சதவீதம் மட்டுமே தேர்ச்சியை பெற்றுள்ளதால் மாணவ மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க | போலி செக் கொடுத்த நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!!

மேலும் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு என்ன காரணம் என்பதை குறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு இனிவரும் காலங்களில் பள்ளியில் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.