42 சதவீதம் அதிகரித்த உள்நாட்டு விமான பயணம்...!!

42 சதவீதம் அதிகரித்த உள்நாட்டு விமான பயணம்...!!

Published on

நடப்பாண்டில் 5 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவுகளின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42 புள்ளி 85 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் 3 கோடியே 53 லட்சம் பேர் பயணித்து இருந்தனர்.  இந்த நிலையில், நடப்பாண்டில் 22 புள்ளி 18 சதவீதம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் சேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47 சதவீத அளவுக்கே ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், பயணிகளின் புகார் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com