பூமியின் வளமான பெண்...28 ஆண்டுகளில் 44 குழந்தைகள்..!!

பூமியின் வளமான பெண்...28 ஆண்டுகளில் 44 குழந்தைகள்..!!
Published on
Updated on
1 min read

40 வயதான பெண்மணி ஒருவர் இதுவரை 44 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்தது சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

முதல் கர்ப்பம்:

ஆப்பிரிக்கா கண்டம் உகாண்டாவில் மரியம் நபடான்சி என்ற பெண்ணுக்கு 12 வயதிலேயே திருமணம் நடைபெற்று முடிந்தது.  13 வயதிலேயே கர்ப்பமான மரியத்துக்கு முதல் பிரசவத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 

4 முறை:

இதையடுத்து ஒவ்வொரு வருடமும் கர்ப்பமாகிய மரியம் சரசரவென குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.  இதில் 4 முறை இரட்டைக் குழந்தைகளை பெற்றவர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளையும், மற்றும் ஐந்து பிரசவத்தில் 5 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.  இந்த வரிசைப்பட்டியலில் இதுவரை இந்த பெண்ணுக்கு ஒரே ஒரு பிரசவத்தில் மட்டுமே ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

28 ஆண்டுகளில்:

திருமணமாகி 28 வருடங்களைக் கடந்த மரியம், இதுவரை 44 குழந்தைகளைப் பெற்றுள்ளார்.  இவர்களில் 6 குழந்தைகள் உடல்நிலை மோசமாமாகி உயிரிழந்த நிலையில் தற்போது 20 ஆண் குழந்தைகளும், 18 பெண் குழந்தைகளும் என தற்போது 38 குழந்தைகள் உள்ளனர். 

சுகப்பிரசவமாகவே:

இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் பிறந்த 44 குழந்தைகளுமே சிசேரியன் முறையல்லாமல் சுகப்பிரசவமாகவே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள இவர் வகாண்டா ஃபார் எவர் வுமனாய் மட்டுமின்றி பூமியின் வளமான பெண் எனவும் அழைக்கப்படுகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com