வனத்துறை மேம்பாட்டிற்கான 7 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு...!

வனத்துறை மேம்பாட்டிற்கான 7 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு...!

Published on

வனத்துறை மேம்பாட்டிற்கான 7 அறிவிப்புகளை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் வனத்துறை மீதான மானிய கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், திண்டுக்கல் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும், தஞ்சாவூர் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இதேபோல், பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் ரூ. 20 கோடியில் அமைக்கப்படும் என்றும், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும், ராம்சார் தளம் -  கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும், அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட 7 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com