நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது - ரயில்வே இணை அமைச்சர்

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது - ரயில்வே இணை அமைச்சர்

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக
மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ் கரூரில் கூறினார்.

2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்பில்லையா?-  Dinamani

கரூர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ் ஆய்வு செய்தார்.  கரூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, கண்காணிப்பு காமிராக்கள் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சிற்றுண்டி அங்காடியில் இரண்டு டீ வாங்கிய அமைச்சர் அதற்கான தொகை 20 ரூபாயை பே.டி.எம் இணையதளம் மூலம் செலுத்தினார்.

மேலும் படிக்க | GST முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் கோரிக்கை வைத்த எம்.பி

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,  
  
இந்தியா முழுவதும் 12 வந்தேபாரத் ரயில்கள் தற்சமயம் இயக்கப்படுகிறது.  விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டு வருகிறோம். கோவிட்டுக்குப் பிறகு ரயில் பயணிகளுக்கு பலவேறு பிரச்னைகள் உள்ளன. மும்பை ஐஐடி மாணவர்கள் இதற்காக செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

ரயில் தீ வைப்பு சம்பவம்: மாணவர்களுக்கு ரயில்வே அமைச்சர் வேண்டுகோள்- Dinamani

ரயில்வே துறையில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, கொரோனாவிற்கு பிறகு நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும். 75 ரயில் நிலையங்கள் நகர்ப்புற ரயில் நிலையங்களாக மாற்றப்பட உள்ளதாக கூறினார்.