"தனது நேர்மை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை " ஆ.ராசா!

Published on: 
Updated on: 
1 min read

தனது நேர்மை பற்றி பேச பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு எந்த அருகதையும்  கிடையாது என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவையில் மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம்  சார்பாக பன்னாட்டு மாநாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, அண்ணாமலையின் செய்லபாடுகளை கண்டித்தார். அப்பொழுது, "அண்ணாமலைக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றும் "என்னுடைய நேர்மையை பேசுவதற்கு அண்ணாமலைக்கோ எல் முருகனுக்கோ பாஜகவுக்கு  அருகதை இல்லை" என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும், நீலகிரிக்கு வந்த மலையக தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com