தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றமா..?!

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றமா..?!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அமைச்சரகள் மற்றும் துறை செயலாளர்களை நிர்வாக வசதிக்காக பல்வேறு மாறுதல்களை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில், 10 ஆண்டுகளுக்கு பின், 2021 மே 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததது.  ஆட்சி அமைத்து ஓராண்டு முடிவதற்குள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக அமைச்சரவையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

அதன் பின், கடந்த டிசம்பர் 14ம் தேதி  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்.
அதைத்தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றியமைக்கப்பட்டது.  இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்து உள்ள நிலையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  அதேபோல துறை ரீதியான செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக, நிதியமைச்சரின் ஆடியோ விவகாரம், அமைச்சர்களின் செயல்பாடுகள், துறை செயலாளர்களின் செயல்பாடுகள் காரணமாக பல்வேறு மாறுதலை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  துறை ரீதியான செயலாளர்களை மாற்றம் செய்வது, அதே நேரத்தில் தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் , புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com