உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு..!

உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு..!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காலதாமதம் செய்ததாக உள்துறை செயலாளர் அமுதாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடரப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை உடனே நிறைவேற்றக் கோரி சிறுமியின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு கால தாமதம் ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகையுடன் 5 சதவீதம் வட்டியும், வழக்கிற்கான செலவையும் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.