
பாஜக ஆட்சியில்தான் கூட்டுறவிற்கு என்று தனித்துறை உருவாக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் 17 ஆவது கூட்டுறவு மாநாட்டை பிரதமர் துவக்கி வைத்தார். சர்வதேச கூட்டுறவு தினத்தை ஒட்டி இந்த கண்காட்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
துவக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கூட்டுறவு துறையினால் தான் பால் பொருட்கள் சர்க்கரை மற்றும் பல்வேறு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாக கூறினார். மேலும் பாஜக ஆட்சியில்தான் கூட்டுறவிற்கு என்று தனித்துறை உருவாக்கப்பட்டதாகவும் வரும் நாட்களில் கூட்டுறவு துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். கூடுதலாக கூட்டுறவு துறை பயனடையும் வகையில் வரிகள் தளர்த்தப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்து டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் ஆதிக்கம் நமது புதிய அடையாளமாக மாறியுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, டிஜிட்டல் பரிவர்த்தனையை கூட்டுறவுத் துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக விவசாயத்திற்கென்று ஒரே திட்டம் மட்டுமே இருந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், இந்தியாவை தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:https://www.malaimurasu.com/Delightful-moi-feasts