காதலனை நம்பிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காதலனை நம்பிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Published on
Updated on
1 min read

திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, பணம் பறித்ததாக திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரைச் சேர்ந்தவர் அலோகம் பவன்குமார். 27 வயது இளைஞரான இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணூரில் உள்ள வி.ஆர். சித்தார்த்தா கல்லூரியில் பி.இ.டி. படித்து முடித்துள்ளார். 

அப்போது கல்லூரியில் உடன் படித்த லங்காவைச் சேர்ந்த எலி நாகேஷ்வரராவ் என்பவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. பவன்குமாருக்கு சிறு வயதில் இருந்தே ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டதையடுத்து தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்துக் கொண்டார்.

இதனிடையே, நாகேஷ்வரராவ் மீது காதல் கொண்ட பவன்குமார் தன்னை அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறியிருக்கிறார். பவன்குமார் வசதி படைத்தவர் என்பதால் அவரை காதலிப்பதாக கூறிய நாகேஷ்வரராவ் அவ்வப்போது பணம் கேட்டுள்ளார்.

இதற்கிடையே காதலனை கரம் பிடிப்பதற்காக காத்திருந்த பவன்குமார், 11 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியுள்ளார். அதன் பின்னர், பவன்குமார் என்ற பெயரை பிரமராம்பிகா என மாற்றியுள்ளார். காதலனிடம் 11 சவரன் தங்கம் மற்றும் 26 லட்சம் ரூபாய் ரொக்கம் போன்றவற்றை கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் பிரமராம்பிகாவிடம் இருந்து நகை, பணத்தை வாங்கிய நாகேஷ்வரராவ், காதலை முறித்துக் கொண்டு தாய் விஜயலட்சுமியுடன் மங்களகிரிக்கு தப்பியோடிவிட்டார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பிரமராம்பிகா காதலன் நாகேஷ்வரராவ் மீது மங்களகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநங்கையாக மாறினால் கரம் பிடிப்பதாய் கூறி ஏமாற்றப்பட்ட காதலனை நினைத்து தவித்து வருவதோடு, நகை பணத்தையும் இழந்து புலம்புகிறார் பிரமராம்பிகா.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com